ஹர ஹர சங்கர….
பல்லவி
ஹர ஹர சங்கர சாம்பசிவா
பரம்பொருளுனையே தினம் பணிந்தேன்
அனுபல்லவி
சிரம் தனில் கங்கையை சுமந்திருப்பவனே
கரன் முரனை வதைத்த கேசவன் நேசனே
சரணம்
பிறப்பிறப்பில்லாத பரமசிவா
மறை பொருள் போற்றும் சதாசிவா
அறம் பொருளின்பம் வீடனைத்தும்
பெற வேண்டித் துதித்தேன் மகாதேவா
No comments:
Post a Comment