அண்ணனும் தம்பியுமாய்……..
பல்லவி
அண்ணனும் தம்பியுமாய் ஒண்ணாக க்காட்சி தரும்
வண்ணம் தனைக்கண்டு மகிழ்வுடன் பணிந்தேன்
அனுபல்லவி
கண்ணன் கேசவனின் மருமக்களைக் காண
புண்ணியமென்ன செய்தேனென்றெண்ணி வியந்து
சரணம்
விண்ணவர் மண்ணவரனைவரும் வணங்கிடும்
கண்ணியமுடையவர் காட்சிக்கினியவர்
எண்ணத்தில் வைத்து போற்றித் துதித்தேன்
பண்ணிசைத்துப் புகழ்பாடி பரவசமடைந்தேன்
அண்ணாமலையும் அவருடைய துணைவி
உண்ணாமுலையும் ஈன்றெடுத்த செல்வங்கள்
சுண்டெலியும் மயிலும் வாகனமாயடைவர்
பண்டொருநாள் பழத்திற்கு சண்டையிட்டுக் கொண்டவர்
No comments:
Post a Comment