1.நின்றால் வேங்டம்
ஒரு நொடி பொழுதேனும் திருமலையில் நின்று விடு
2.கிடந்தால் ரெங்கமாம்
அரங்கநாதனை ஒரு நொடியேனும் கிடந்து வலம் வந்து விடு
3.அமர்ந்தால் கச்சியாம்
கச்சி மாநகரில் ஒரு நொடியேனும் அமர்ந்து இருந்து வரதனை அனுபவி
4.விழுந்தால் கோட்டையாம்
மேல் கோட்டை நாராயணை ஒரு நொடியேனும் விழுந்து நமஸ்கரி
5.தொழுதால் அமுதமாம்
குடந்தை சாரங்கபாணியை ஒரு நொடி பொழுதேனும் வணங்கி விடு
6.அழுதால் கடிகையாம்
திருகடிகை அக்கார கனியை நினைந்து ஆனந்த கண்ணீரில் நனை ஒரு நொடியேனும்
7.நினைந்தால் பூரியாம்
பூரி ஜெகன் நாதனை ஒரு நொடியேனும் நினைந்து விடு
8.நடந்தால் துவாரையாம்
துவாரக புரியில் ஒரு நொடியேனும் நடந்து செல்
9.இருந்தால் குருவாயூராம்
குருவாயூரில் ஒரு நொடியேனும் தங்கி விடு
10.இறந்தால் பத்ம நாபமாம்
இறந்து விட்டால் அனந்த புரத்தில் இறந்து விடு
11.அலைந்தால் உடுப்பி யாம்
பேய்போல் அலைந்தாலும் உடுப்பியில் அலை
12.சேர்ந்தால் பாண்டு ரங்க மாம்
சேர்ந்தால் பாண்டு ரங்கன் திருவடியை சேர்ந்து விடு மனமே
நாமமே பலம் நாமமே சாதனம்
ராம கிருஷ்ண ஹரி பாண்டுரங்க ஹரி
நாமம் பல சொல்லி…….
பல்லவி
நாமம் பல சொல்லி நாரணனைத் துதித்தேன்
சேமமுற வேண்டியவன் திருவடி பணிந்து
அனுபல்லவி
ஆமருவியப்பன் கேசவனை மாதவனை
சாமமுதல் வேதங்கள் போற்றும் உத்தமனை
சரணங்கள்
நின்றால் திருவேங்கடத்தில் நின்றிட வேண்டும்
கிடந்தாலரங்கம்தனில் கிடந்திட வேண்டும்
அமர்ந்தால் காஞ்சிமா நகரிலமர்ந்து
வரதனை அனுபவித்து வணங்கிட வேண்டும்
விழுந்து வணங்கிட சிறந்த திருத்தலம்
அழகன் மேலக்கோட்டை செலுவ நாராயணன்
எழுந்தருளியிருந்து காட்சியளித்திடு்ம்
அழகிய திருநாராயணபுரமே
தொழுதிட அமுதென விளங்கும் ஓரிடம்
பழுதின்றி சாரங்கன் கிடந்திடும் குடந்தையே
அழுது ஆனந்தக் கண்ணீரில் கரைந்து
துதிப்பதக்காரக்கனியிருக்கும் கடிகையே
நினைப்பது பூரி ஜகந்நாதனையே
நடப்பது துவரை நாதனை நினைந்தே
இருப்பது குருவாயூர்க் கண்ணனின் வீடே
இறப்பது அனந்தங்காடெனும் தலமே
அலைந்து திரிவது உடுப்பிக் கண்ணனுடன்
சேர்வது பாண்டுரங்கன் திருவடி மட்டுமே
துதித்திடு மனமே விட்டலனை தினமே
கதியவன் பதமே அறிவாய் மனமே
ராமகிருஷ்ண ஹரி பாண்டுரங்க ஹரி
விட்டல விட்டல ஜெய ஜெய விட்டல
No comments:
Post a Comment