अरुणां करुणा तरंगिताक्षीं धृतपाशांकुश पुष्पबाणचापाम् ।
अणिमादिभि रावृतां मयूखैः अहमित्येव विभावये भवानीम् ॥ १ ॥ பேதமற்றவரே……
பல்லவி
பேதமற்றவரே நீயும் நானும்
மாதே பவானி நீயுரைத்ததுவே
அனுபல்லவி
மாதவன் கேசவன் சோதரியும் நீயே
வேதங்களுரைத்திடும் சாரமும் நீயே
சரணம்
வேதியரோதும் மொழியும் பொருளும்
ஆதியுமந்தமும் சோதியும் சுடரும்
மேதினி போற்றும் சிவமும் சக்தியும்
யாதுமானவளே மாதே ஶ்ரீ லலிதே
No comments:
Post a Comment