ரங்கனாதனின் சின்ன பாதங்கள்..
அந்த ரங்கனாதனின் பாதங்களில் (தங்கக் கவசத்தில்) பல்வேறு சின்னங்கள் இருக்கும். அவை என்னென்ன? உற்றுப் பார்த்தாலும் சரிவர புரியவில்லை. கூகுளில் தேடியதில் கிடைத்தது இந்தப் படம். ஆனால், ஸ்ரீபாதராயரின் இந்தப் பாடலைப் பார்த்ததும் அனைத்து சந்தேகங்களும் தீர்ந்தன.
அந்தப் பாதங்களில் என்னென்ன இருக்கும்? அவரே சொல்கிறார் பாருங்கள். இவ்வளவு சிறப்பு மிக்க பாதங்களைக் கண்ட ஆனந்தத்தில் உருவாகியது இந்த புகழ்பெற்ற அவரது பாடல்.
இக்கோ நோடே ரங்கனாதன சிக்க பாதவ
சிக்கிதே ஸ்ரீ லக்ஷ்மி பதிய திவ்ய பாதவ (இக்கோ)
இங்கே பாருங்க ரங்கனாதனின் சின்ன பாதங்களை
(காணக்) கிடைத்தன ஸ்ரீ லக்ஷ்மிபதியின் திவ்யமான பாதங்கள் (இக்கோ)
சங்க சக்ர கதா பத்ம அங்கித பாதவ
அங்குச குலிஷ த்வஜா ரேகா அங்கித பாதவ
பங்கஜாசனன ஹ்ருதயதல்லி நலியுவ பாதவ
சங்கட ஹரண வேங்கடேசனன திவ்ய பாதவ (இக்கோ)
சங்க சக்ர கதா பத்ம ஆகியவை இருக்கும் பாதங்கள்
அங்குசம் கோடரி கொடி ரேகைகள் (அல்லது சூரியனின் ரேகைகள்) இருக்கும் பாதங்கள்
தாமரை ஆசனத்தில் வீற்றிருக்கும் லக்ஷ்மியின் இதயத்தில் இருக்கும் பாதங்கள்
கஷ்டங்களைப் போக்கும் வேங்கடேசனின் திவ்ய பாதங்களை (இக்கோ)
லலனே லக்ஷ்மி அங்கதல்லி நலியுவ பாதவ
ஜலஜாசனன அபீஷ்டவெல்ல சலிசுவ பாதவ
மல்லர கெலிது கம்சாசுரன கொந்த பாதவ
பலிய மெட்டி பாகிரதிய படெத பாதவ (இக்கோ)
(அவன்) மனைவியான லக்ஷ்மியின் ஒரு பாகமாக விளங்கும் பாதங்கள்
பிரம்மனின் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றும் பாதங்கள்
மல்லர்களை வென்று கம்சனைக் கொன்ற பாதங்கள்
பலிச் சக்கரவர்த்தியை மிதித்து பாகிரதியை அடைந்த பாதங்களை (இக்கோ)
பண்டெய பாலெய மாடித உத்தண்ட பாதவ
பண்டியொளித்த சகடாசுரன ஒத்த பாதவ
அந்தஜ ஹனும புஜதொளுப்புவ அந்தத பாதவ
கண்டேவே ஸ்ரீ ரங்க விட்டலன திவ்ய பாதவ (இக்கோ)
பாறையை ஒரு அழகிய பெண்ணாக மாற்றிய அசாதாரணமான கால்கள்
வண்டியைத் தள்ளி சகடாசுரனைக் கொன்ற பாதங்கள்
அனுமனின் தோள்களில் ஏறும் கால்கள்
கண்டேனே ஸ்ரீ ரங்க விட்டலனின் திவ்யமான கால்களை (இக்கோ)
கமலபதம்…..
பல்லவி
கமலபதம் துதித்தேன் ஶ்ரீரங்கநாதனே
கமலநாபனே எனக்கருள் புரிவாய்
அனுபல்லவி
அமரரமரேந்திரனும் சுகசனகாதியரும்
நமஸ்கரித்திடும் கேசவனே மாதவனே
சரணங்கள்
கமலம் சங்கு சக்கரம் கதையுடன்
அங்குசம் கோடரி பானு ரேகை கொண்ட…..
கமல மலரமர் திருமகளின் இதய
கமலத்திலமர்ந்திருக்கும் அழகிய திவ்ய…..
அமைதியளித்து துன்பங்கள் போக்கிடும்
கமலக் கண்ணன் வெங்கடேசனுன்…..
கமல கரத்தாளின் மனத்திலிருப்பதும்
கமலாசனனின் விருப்பம் நிறைவேற்றுமுன்….
மல்லரை வென்று கம்சனைக் கொன்ற
மாபலியை வென்று கங்கையைத் தந்த …..
கல்லைக் காரிகையாய் மாற்றிய அதிசய
கொல்ல வந்த சகடாசுரனையும் வதைத்த…..
அனுமனின் அழகிய தோள்களிலமர்ந்த
அதிசயங்கள் பலப்பல புரிந்த…..
No comments:
Post a Comment