Thursday, 1 September 2022

இடது காலை

 சீதளேத்வம் ஜகன்மாதா சீதளேத்வம் ஜகத்பிதா சீதளேத்வம் ஜகத்தாத்ரி சீதளாயை நமோ நம:     

                  மாரியம்மன் வழிபாடு ...

மாரியம்மன் என்பவள் பாமரர்கள் வழிபடும்  ஒரு கிராம தேவதை ; அவளது வழிபாடு நாட்டுப்புற மக்களால் அவரவர் மரபையொட்டி இயற்றப்படுவதேயன்றி அவளுக்கு ஆகம வழிபாடோ, பூஜாவிதியோ கிடையாது; அவளைப் பற்றி ஆகமங்களில் எவ்வித குறிப்பும் இல்லை என்பதே  அறிஞர்கள் உட்பட பலரின்  கூற்றாக உள்ளது.இருப்பினும் இது உண்மையல்ல.உத்தர காரணாகமத்தின் 95 வது படலமான மஹாமாரி ஸ்தாபனா விதி படலம் மாரியம்மனைப் பிரதிஷ்டை செய்யும் முறையையும்,பூஜிக்கும் முறையையும்,அவளின் ஆலயங்களில் உத்ஸவம் நிகழ்த்தும் முறையையும் விவரிக்கின்றது.

எதனால் “மஹாமாரி” என்றப் பெயர் ஏற்பட்டது? 

ஸ்போடகாதி  ப்ரஸமநம் ஸர்வலோகபயங்கரம் ||

மாராஸுரேந  பலினா பீடிதே  ச  ஜகத்த்ரயே |

மாராஸுர வதம் பூர்வம் மஹாமாரீதி நாமத: ||

மூவுலகங்களையும் அம்மைநோயின் மூலம் பீடித்திருந்த மாராஸுரன் என்பவனை வதம் செய்ததால் அவளுக்கு  “மஹாமாரி” என்றத் திருநாமம் உண்டாயிற்று.

த்ரிநேத்ரா சதுர்புஜா ஸாந்தா கராலவதநாந்விதா |

ஜ்வாலோர்தவகேசிநீ ரக்தா கபாலம் கட்க பாஸிநீ ||

டமருந்தார்யதே சைவ பத்ம பீடோபரிஸ்திதா |

ஸயநம் வாமபாதந்து லம்பிதம் ஸவ்யபாதகம் ||

க்ருஷ்ணவஸ்த்ர ஸமாயுக்தம் நாகயாக்ஞோபவீதீ நீம்|

தடங்கம் தக்ஷிணே கர்ணே வாமே லம்ப ஸமந்விதாம் ||

ஸர்வாபரணபூஷ்யான் ச ப்ரபாமண்டல மத்யகாம் |

மூன்றுக் கண்களும், கபாலம்,வாள்,பாசம் மற்றும் உடுக்கையேந்திய நான்கு கரங்களும்,கோரைப்பற்களையுடைய சாந்தமான முகத்தோற்றமும்,மேல்நோக்கிய ஜ்வாலகேசமும் கொண்டு விளங்குபவளும் ; பத்மபீடத்தின் மீது இடதுக் காலை  மடக்கி வலதுக் காலை கீழிருத்தி அமர்ந்திருப்பவளும்;கருத்தவஸ்த்ரத்தை அணிந்து  சர்பத்தை யாக்ஞோபவீதமாகக் கொண்டவளும்; தாடங்கம் அணிந்த வலதுக் கர்ணமும், தொங்குகின்ற இடதுக் கர்ணமும் கொண்டுத் திகள்பவளும்,அனைத்து ஆபரணங்களையும் அணிந்து ப்ரபாமண்டலத்தின் மத்தியில் வீற்றிருப்பவளே மஹாமாரி.

மஹாமாரி ப்ரதிஷ்டைக்குப் பதினாறு தூண்களையுடைய மண்டபத்தை நிர்மாணித்து மத்தியில்  வேதியை நிறுவவேண்டும்:

பூர்வோக்த விதினா சைவ ஷோடச ஸ்தம்ப ஸம்யுதம் |

மத்யே வேதிம் ப்ரகல்ப்யாத தர்பனோத்தர ஸந்நிபம் ||

வேதியின் மத்தியில் கரகத்தை ஸ்தாபித்து மாரியை அதில் ஆவாஹனம் செய்து கலாந்யாஸம்  செய்ய  வேண்டும்:

கரகம் சமலங்க்ருத்ய ஆஸனம் பூர்வவத்யஜேத்|

மூர்த்திம் அப்யர்ச்ய ஸம்பூஜ்ய கலாந்யாஸம் ஸமாசரேத்||

மஹாமாரியின் மூல மந்த்ரம் :

ப்ரணவம் பூர்வம் உச்சார்யா மாயாபீஜம் அத: பரம் ||

ஸ்ரீம்காரந்து தத: ஹ:ஹ: ஹும் பட் இத்யபி |

ஸ்வாஹாந்தம்  உச்சரேத் பூஜ்ய ஆவாஹ்ய கடமத்யமே ||

மஹாமாரியின்  அஷ்ட சக்திகளின் பெயர்கள் :

காளீ ச காளராத்ரீ ச பத்ரா ச கோமளீ ததா |

யாமலீ சைவ பாசாங்கீ சகோராக்ஷி ததைவ ச ||

ஷட்கோணவாஸிநீத்யேதே அஷ்டகும்பே ஸுபூஜயேத் |

கடுகான்னம்,மிளகு சாதம்,மஞ்சட்போடி  கலந்த அன்னம், உளுந்தன்னம், பாயசம், வடை முதலியவற்றைக் கொண்டு ஹோமம் செய்யவேண்டும்.தாம்ரபாத்ரத்தில் உள்ள பாலால் ஹோமம் செய்வது விசேஷம் என்ற குறிப்புள்ளது:

ஸர்ஸபான்னம் மரிச்யான்னம் ஹரித்ராந்நம் ஹுநேத் ததா |

மாஷான்னம் பாயசம் சைவ மாஷாபூபம் ஹுநேத் ததா ||

தாம்ரபாத்ரே க்ஷிபேத்கவ்யம் ஹோமயித்வா விசேஷதா: |

எருமைநெய்யைக் கொண்டு மாவிளக்குப் போடுவது விசேஷம்  என்றுள்ளது- மாஹிஷாஜ்யம் சமாதாய சித்ரதீபம் ஸமாசரேத்|

                                                       இடது காலை…..


                                                             பல்லவி 

                                      இடதுகாலை மடக்கி வலதுகாலை கீழிருத்தி

                                     வீற்றிருக்கும் மகா மாரியைத்துதித்தேன்

                                                           அனுபல்லவி

                                     குடமாடும் கூத்தன் கேசவன் சோதரியை

                                     படமெடுத்த பாம்பின் குடை கீழமர்ந்தவளை                                     

                                                                 சரணம்

                                     மூன்று கண்ணுடையவளை முக்கண்ணியை

                                     நான்கு கரத்தில் கபாலம் பாசம் 

                                     உடுக்கு டமரம் வாள் வைத்திருப்பவளை

                                     கருநிற ஆடைகளணிந்திருப்பவளை


                                     பாம்பை முப்பிரி நூலாயணிந்தவளை

                                     வலக்காதில் தாடங்கமணிந்திருப்பவளை   

                                     தொங்குகின்ற இடக்காது தனையுடைவளை

                                     அணிமணி ஆரங்கள் பல புனைந்திருப்பவளை

                                      

                                     

No comments:

Post a Comment