ஶ்ரீ லக்ஷ்மிநாராயணி
பல்லவி
அன்னையே ஶ்ரீ லக்ஷ்மிநாராயணி
என்மனத்தாமரையில் எழுந்தருள்வாயே
அனுபல்லவி
உன்னையே அனுதினம் மனமாரத் துதித்தேன்
பொன்னம்பலம்தனில் வீற்றிருப்பவளே
சரணம்
சென்ன கேசவன் மார்பணி நீயே
இன்னிசையருளும் கலைவாணி நீயே
பன்னகபூஷணி பார்வதியும் நீயே
உன்னருளொன்றே என்றும் வேண்டினேன்
No comments:
Post a Comment