மணக்குள கணபதி
பல்லவி
கணபதியே பணிந்தேன் நலமருள்வாய்
வணங்கிடுமடியவர் வினைகளைத்தீர்த்திடும்
அனுபல்லவி
துணை நீயே துதிக்கையனே கரிமுகனே
இணையொரு தெய்வமில்லாத மணக்குள
சரணம்
கணங்களும் நந்தியும் தேவரும் முனிவரும்
அணங்குகள் சித்தியும் புத்தியும் துதித்திடும்
மணம் தருமரவிந்த மலர்ப்பாதனே
குணம் நிறைந்தவனே கேசவன் நேசனே
No comments:
Post a Comment