திருமால்
பல்லவி
திருமகளைத் திருமார்பில் தாங்கும் திருமாலே
திருவடி பணிந்தேன் எனக்கருள் புரிவாய்
அனுபல்லவி
குருவாயுரப்பனும் கேசவனும் நீயே
திருவேங்கடமுடையான் கோவிந்தனும் நீயே
சரணம்
கருணைக்கடலென்றும் அருள்தரும் வள்ளலென்றும்
பெருமையுடன் உனைப்பேசும் வார்த்தைகளும் மெய்யானால்
கருமவினைப்பயனால் கட்டுண்ட என்னை
விடுவித்து ஆட்கொள்ள தருணம் இதுவே
No comments:
Post a Comment