கதிநீயே கணபதி
பல்லவி
கதிநீயே கணபதியுன் மலரடி பணிந்தேன்
துதிக்கையன் உனதருளைப் பெறவேண்டித்துதித்தேன்
அனுபல்லவி
அதிசயமான ஆனைமுகத்தோனே
முதலில் அனைவரும் வணங்கிடும் கரிமுகனே
சரணம்
கதிரேசன் சோதரனே கேசவன் மருகனே
கதிரவனைக்காட்டிலும் அதிக ஒளிபடைத்தவனே
பதிகளில் சிறந்த அம்ருதபுரிதன்னில்
புதிதாக எழுந்தருளிக் காட்சியளிப்பவனே
No comments:
Post a Comment