கரம்பனூர் உத்தமன்
பல்லவி
பக்தி செய்தே பணிந்தேன் கேசவா
முக்தியளித்தெனை காத்தருள வேண்டுமென
அனுபல்லவி
சக்தி சோதரனே சதுர்மறைபோற்றும்
உத்தமனே திருக்கரம்பனூர் தலம் வந்து
சரணம்
அறியாத சிறுவயதில் பிழைகள் பல செய்தேன்
பெரியவனாயினபின் பிறருக்கே உழைத்தேன்
சரியான வழியெதுவும் தெரியாமல் தவித்தேன்
புரியாத புதிரான அரியே உன் கழல் துதித்து
No comments:
Post a Comment