உமாபதி மைந்தன்
பல்லவி
உமாபதியின் புதல்வனே கணபதியே
சமானமுனக்கு வேறு யாருள்ளார்
அனுபல்லவி
குமாரன் சோதரனே கேசவன் மருகனே
நரர்சுரர் பணிந்திடும் வேழமுகத்தோனே
சரணம்
ஆரணப்பொருளே அனைத்துக்கும் முதல்வனே
காரணப்பெயர் கொண்ட வாரணமுகனே
கோர அரக்கரின் விதி முடித்த சூரனே
பாரெங்கும் புகழ் விளங்கும் ஆனைமுகத்தோனே
பூரணம் பொதிந்த மோதகக்கையனே
மாரனை விடவும் பேரழகுடையவனே
சூரியனை விஞ்சும் ஒளி மிகுந்தவனே
கோரின வரம் தரும் கருணைக் கடலே
No comments:
Post a Comment