வரசித்தி விநாயகன்
பல்லவி
வரசித்தி விநாயகன் பாதம் பணிந்தேன்
அரக்கரையழித்து நரர்சுரர் குலம் காத்த
அனுபல்லவி
வரங்களைத்தருபவன் கரமைந்துடையவன்
அரனயன் கேசவன் போற்றும் கரிமுகன்
சரணம்
சுரபதி ரதிபதி தனங்களின் அதிபதி
தேவசேனாபதி வணங்கிடும் கணபதி
தொடங்கும் செயலனைத்தும் தடையின்றி நிறைவுற
முதலில் துதித்திடும் முழுமுதற்கடவுள்
No comments:
Post a Comment