சரவணன்
பல்லவி
உந்தன் திருவடியே சரணடைந்தேன்
கந்தனே குகனே வேலேந்தும் சரவணனே
அனுபல்லவி
பந்துவும் நீயே தோழனும் நீயே
சுந்தரனுனையே சிந்தையில் நினைந்து
சரணம்
இந்திரன் மகளை மணம் புரிந்தவனே
தந்திரமாய் வள்ளி கரம் பிடித்தவனே
தந்தைக்கு மந்திரமோதிய தனயனே
சிந்தை கவர்நதிடும் கேசவன் மருகனே
No comments:
Post a Comment