பண்டரிபுரத்தரசன்
பல்லவி
பண்டரிபுரத்தரசே பாண்டுரங்கவிட்டலா
தண்டனிட்டு பணிந்தேன் தயைபுரிந்திடுவாய்
அனுபல்லவி
அண்டர்குலம் தழைக்க அமுதளித்தவனே
பண்டொரு நாள் கரிக்கு அபயமளித்தவனே
சரணம்
தொண்டர்தம் துயர் துடைக்க ஓடோடி வருபவனே
கண்டவர் மனம் மயங்க காட்சி தரும் கேசவனே
மண்ணையுண்ட வாயனே மாயக்கண்ணனே
எண்ணமெலாமுனையே நினைக்குமெனையாட்கொள்வாய்
No comments:
Post a Comment