அய்ங்கரன்
பல்லவி
உளமுருகியுனைப் பணிந்தேன் கணபதியே
வளமான வாழ்வும் மனநிறைவும் பெறவே
அனுபல்லவி
அளவிட முடியாத கீர்த்தி நிறைந்தவனே
வள்ளி மணாளன் முருகேசன் தமயனே
சரணம்
நிலையிலா இவ்வுலகில் நிலையானவன் நீயே
மலைமகள் பார்வதி போற்றும் தலைமகனே
அலைகடலில் துயிலும் கேசவன் மருகனே
கலையிசை நாட்டிய ரசிகனே அய்ங்கரனே
No comments:
Post a Comment