காமாட்சி
பல்லவி
எத்தனையோ வடிவில் காட்சி தந்தாலும்
சித்தத்தில் காமாட்சி உனையே துதித்தேன்
அனுபல்லவி
சக்தியும் சிவனும் ஆனவள் நீயே
முக்தியளித்தெனை காத்தருள்வாயே
சரணம்
சித்தர்கள் யோகியர் ஞானியர் மற்றும்
பக்தர்கள் வணங்கிடும் ஏகாம்ரேச்வரி
தத்பரன் ஏகாம்ரேச்வரன் நாயகி
அத்திகிரி வரதன் கேசவன் சோதரி
No comments:
Post a Comment