தலசயனப்பெருமாள்
பல்லவி
பலவிதமாயுன்னை பக்தியுடன் துதித்தேன்
தலசயனப்பெருமாளே நீயெனக்கருள்வாய்
அனுபல்லவி
நிலமங்கை மனங்கவர் உலகுய்ய நின்றவனே
கடல்மல்லை திருத்தலத்தில் அவதரித்த கேசவனே
சரணம்
அலைமகளைத் திருமார்பில் வைத்திருக்கும் திருமாலே
அலங்காரப்பிரியனே அரவிந்தபதத்தானே
நலமனைத்தும் பக்தருக்கு அள்ளி அளித்திடும்
உலகளந்த நெடுமாலே நீலவண்ணனே
No comments:
Post a Comment