திருவலஞ்சுழி கணபதி
பல்லவி
நலம்தரும் வலம்புரி கணபதியைத்துதித்தேன்
உலகெலாம் போற்றும் முழுமுதற்கடவுளை
அனுபல்லவி
தலங்களுள் சிறந்த திருவலஞ்சுழியில்
வெள்ளைவாரண முகனாய் வீற்றிருக்கும்
சரணம்
வெள்ளைக்கலையுடுத்தி சிவந்த மேனியுடன்
பிள்ளையாரென்றழைக்கும் பக்தர்களின் மனங்களை
கொள்ளை கொள்ளுகின்ற கேசவன் மருகனை
கள்ளமில்லாமல் வினைகளைத் தீர்ப்பவனை
No comments:
Post a Comment