ராகம்:ஆபோகி
தாளம்: க.சாபு
சரணம் கணபதி
பல்லவி
சரணம் சரணம் கணபதியே சரணம்
அரனரியயன் பணி குணநிதியே சரணம்
துரிதம்
நரர்சுரர் இந்திரன் நந்தி கணங்கள்
கரம் பணிந்தேத்தும் வாரணமுகனே
அனுபல்லவி
மரணம் பிறப்பெனும் பவச்சுழல் தவிர்த்திட
கரமைந்துடையவனே உனதருள் வேண்டினேன்
சரணம்
பரம்பொருள் நீயே நிரந்தரம் நீயே
சரவணன் தமையனே சதுர்மறைப்பொருளே
வரங்களையளித்திடும் கேசவன் மருகனே
பரகதி பெறவே உனதருள் தருவாய்
No comments:
Post a Comment