பாராமுகமேனோ
பல்லவி
பாராமுகமேனோ நாராயணா உனை
பாடித்துதித்திடும் ஏழையென் மீது
துரிதம்
திருமகள் நிலமகள் அருகினிலிருக்கும்
ராஜகோபாலனே நீலவண்ணனே
அனுபல்லவி
ஓராயிரம் நாமம் நாவார உரைத்து
பாராயணம் செய்து பதமலர் துதித்தேன்
சரணம்
கருணைக்கடலென்றும் தீனசரண்யனென்றும்
அடியார்கள் முனிவர்கள் உரைப்பதும் பொய்யோ
தருமமோ கேசவா உனது கடைக்கண்
அருளளிக்காமல் இருப்பதும் முறையோ
No comments:
Post a Comment