காயாம்பூவண்ணன்
பல்லவி
தாயினும் சிறந்த தயாபரனைக் கேசவனை
திருவரங்கநாதனை மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
ஆயர் குலத்தில் கண்ணனாயவதரித்த
மாயன் மதுசூதனனை தேவகி மைந்தனை
சரணம்
நோயாம் பவம்தனைக் களைந்திடவேண்டியும்
சேயெனை கனிவுடன் இனிதாட்கொள்ளவும்
காயாம்பூவண்ணனைக் கமலநாபனை
தேயாத புகழ் மேவும் திருவேங்கடமுடையானை
No comments:
Post a Comment