மங்களகிரி நரசிம்மன்
பல்லவி
இரக்கம் உனக்கு வரவில்லையா
சென்ன கேசவா எனைக்காக்க இன்னும்
அனுபல்லவி
உறக்கத்திலும் உந்தன் திருவடி மறவாத
வரம் வேண்டித்துதித்திடும் பக்தனெனக்கருள
சரணம்
கரங்களில் சங்கும் சக்கரமுமேந்தும்
பரம்புருஷனே பாண்டுரங்கனே
அரனயன் பணியும் ஆராவமுதனே
மங்களகிரி வளர் ஶ்ரீநரசிம்மனே
No comments:
Post a Comment