ஶ்ரீ ராமன்
பல்லவி
உன் தயையொன்றே போதும் ஶ்ரீ ராமா
நிந்தை புரிந்திடும் அரக்கருக்குமருள் தரும்
அனுபல்லவி
என்மனத்தாமரையில் உன்னிரு திருவடி
என்றும் மறவாமல் நிலைத்து இருந்திட
சரணம்
அன்னை தந்தையும் ஆருயிர்த் தோழனும்
நன்னெறி புகட்டும் குருவும் நீயே
முன்னறி தெய்வமே கன்னலே கேசவா
இன்னருள் தந்தெனை இனிதாட்கொள்ள
No comments:
Post a Comment