சென்ன கேசவன்
பல்லவி
உன் முகத்தாமரையைக் கண்டு மனம் களித்தேன்
கன்னலே தேனே என் சென்ன கேசவா
அனுபல்லவி
என்மனக் கோயிலில் உன்னையமர்த்தி
பன்னகசயனனே அனுதினம் துதித்தேன்
சரணம்
புன்சிரிப்புடனே புல்லாங்குழலூதி
இன்னிசை பொழிந்து இன்புறச் செய்தாய்
சின்னப் பதங்களில் தண்டை சிலம்பாட
என்னிரு கண்குளிர சிங்கார நடம்புரிந்தாய்
No comments:
Post a Comment