மாயே ஶ்ரீலலிதே
பல்லவி
மாயாமாளவகௌளையில் மயங்கிடும்
மாயே ஶ்ரீலலிதா திரிபுரசுந்தரி
அனுபல்லவி
மாயன் கேசவன் சோதரி கௌரி
மாயையகன்றிட மனமாரத் துதித்தேன்
சரணம்
ஓயாதுனைத்தொழும் பக்தருக்கெல்லாம்
நீயே விசாலாட்சி மீனாட்சி காமாட்சி
எனும் பலவடிவில் காட்சியளித்து
தாயாக வந்து தயவளிப்பவளே
No comments:
Post a Comment