தாளம்: ஏகதாளம்
இராகம்: நாகஸ்வராளி
கணபதி நீயே
பல்லவி
கணபதி நீயே துணைபுரிவாயே
துரிதம்
கணங்களும் நந்தியும் தேவரும் பணிந்திடும்
அனுபல்லவி
வணங்கிடுமடியவர் குறை தீர்ப்பவனே
துரிதம்
இணையுனக்காருளார் முழுமுதற்கடவுளே
சரணம்
குணமுயர்ந்திடவும் நலம் பெருகிடவும்
இணையடி நிழலே என்றும் வேண்டினேன்
துரிதம்
ப்ரணவப் பொருளே கேசவன் மருகனே
அணங்குகள் சித்தியும் புத்தியும் பணிந்திடும்
No comments:
Post a Comment