நீலவண்ணன் கேசவன்
பல்லவி
நம்பியுனைப்பணிந்தேன் மாலனே கேசவா
உம்பர் முனிவர் தொழும் நீலவண்ணனே
அனுபல்லவி
வெம்பவக்கடலினைக் கடந்திடச்செய்து
அன்புடன் எனையே ஆண்டு கொள்ள வேண்டுமென
சரணம்
தும்புரு நாரதரும் நரர் சுரருமிந்திரனும்
அம்புலி கதிரவனும் கோள்களனைத்தும்
சம்புவுடன் நான்முகனும் திருமகளும் பணிந்தேத்தும்
அம்புயநாபனே அரவிந்த பதத்தோனே
No comments:
Post a Comment