காமாக்ஷி
பல்லவி
தஞ்சமடைந்தேன் காமாக்ஷி
குஞ்சரி மணாளன் குமாரனன்னையே
அனுபல்லவி
அஞ்சேலென்று நீ அபயகரம் காட்டி
சஞ்சலம் களைந்தெனைக் காத்தருள்வாயே
சரணம்
நஞ்சுண்டகண்டன் ஏகாம்ரேச்வரனும்
அஞ்சுகரபாலன் கணபதியும் போற்றும்
நஞ்சரவணை துயிலும் கேசவன் சோதரி
பஞ்சபாணப் பயிரவியே உமையே
No comments:
Post a Comment