பாண்டுரங்கன் தரிசனம்
பல்லவி
பாண்டுரங்கன் தரிசனமே அடியார்
வேண்டிடும் அனுபவமே என்றும்
அனுபல்லவி
தீண்டவரும் காளிங்கன் தலைமீது நடம் புரிந்த
தேவகி மைந்தன் ஶ்ரீவாசுதேவன்
சரணம்
காண்டீபன் பார்த்தனுக்கு கீதையை ஓதிய
பாண்டவர் நேசன் கண்ணன் கேசவன்
வேண்டுவோர் வேண்டும் வரங்களைத் தருபவன்
காண்பவர் மனங்களை களிப்புறச் செய்திடும்
No comments:
Post a Comment