கேசவன் திருவடி
பல்லவி
நினைத்தாலும் போதும் ஆனந்தம் பொங்கும்
மனதாரக்கேசவன் திருவடி தனையே
அனுபல்லவி
வினைப்பயன் விலகும் பவபயம் அகலும்
அனைத்து நலன்களும் அடைந்திடச் செய்யும்
சரணம்
தனக்குவமையில்லாத தனிப்பெருங்கடவுளை
வனமாலையணிந்த சக்கரக்கையனை
அனல் புனல் காற்று நிலம் நீள்விசும்பென
அனைத்துமானவனை ஆதிதேவனை
No comments:
Post a Comment