பாலவிநாயகன்
பல்லவி
ஆடி வரும் வேழந்தன்னில் உன்னழகைக்கண்டு
பாடித்துதித்தேன் பாலவிநாயகனே
துரிதம்
தாதை தகதிமி தைய தையவென
ஜதியுடன் இசையுடன் அசைந்து அசைந்து
அனுபல்லவி
கோடிக்கதிரவனின் ஒளியும் உனக்கீடில்லை
நாடி வரும் பக்தருக்கு நலமருளும் கணபதியே
சரணம்
ஆடல் பாடல் கலைகளை ரசித்திடும்
ஞானச்சுடரே கேசவன் மருகனே
இடர்கள் கவலைகள் களைந்திடும் அய்ங்கரனே
எளியவர்க்கருளும் கருணாகரனே
No comments:
Post a Comment