குகசோதரன்
பல்லவி
கணபதியே உந்தன் மலர்த்தாள் பணிந்தேன்
வணங்கிடும் கேசவன் மனக்கவலை தீர்த்தருள்வாய்
அனுபல்லவி
குணம் நிறைந்தவனே குகசோதரனே
கணங்களும் நந்தியும் முனிவரும் பணிந்திடும்
சரணம்
கொம்பொன்றை ஒடித்து பாரதம் எழுதிய
தும்பிக்கையானுனை அனுதினம் துதித்தேன்
அம்புலி பிறையணிந்த அம்புய பதத்தினனே
நம்பிடும் எனையே காத்தருள் புரிவாய்
No comments:
Post a Comment