உத்தமனே கேசவா
பல்லவி
நித்தமும் உந்தன் கழலடி துதித்தேன்
அநித்யம் வாழ்வென்று அறிந்தே கேசவா
அனுபல்லவி
முத்தொழில் செய்திடும் மூவரும் பணிந்திடும்
தத்துவப் பொருளே அனைத்துக்கும் முதலே
சரணம்
வித்தகர் ஞானியர் யோகியர் உரைத்திடும்
அத்தனை மொழிகளும் ஏதும் பயனில்லை
சத்தியம் நீயன்றி வேறொரு துணையில்லை
உத்தமனே எனக்கு முக்தியளித்திடுவாய்
No comments:
Post a Comment