பாரதி
பல்லவி
பாரதியுந்தன் பதமலர் பணிந்தேன்
இசைஞானம் கல்வி எனக்கருள்வாயே
அனுபல்லவி
நாரதர் நான்மறை நரர்சுரர் போற்றும்
சாரதே வாணி சதுர்முகன் நாயகி
சரணம்
நேரெதிர் நின்று துதித்திடும் பக்தருக்கு
கோரின வரம் தரும் ஶ்ரீசரச்வதி
வாரணமுகனும் கேசவனும் பணி
வீணாபாணி கலைகளின் ராணி
No comments:
Post a Comment