தாயும் தந்தையும் நீயே
பல்லவி
தாயும் தந்தையும் நீயென நம்பினேன்
சேயெனைக் கனிவுடன் ஆண்டருள் கேசவா
அனுபல்லவி
ஓயாதுந்தன் ஆயிரம் திருநாமம்
வாயார உரைத்து மனமாரத் துதித்தேன்
சரணம்
தூயவனே நீ அருகினிலிருந்தாலும்
மாயையினாலதை அறியாமலிருந்தேன்
கோயில் குளமெலாம் தேடியலைந்தேன்
மாயனே உனதருளால் மனம் தெளிந்தேன்
Thayum thanthaiyum neeye
Pallvi
Thayum thanthaiyum neeyena nambinen
Seyenai kanivutan andarul kesava
Anupallavi
Oyaathunthan ayiram thirunamam
Vayara uraiththu manamara thuthiththen
Saranam
Thooyavane nee arukinilirunthaalum
Mayaiyinal athai ariyamalirunthen
Koyil kulamelam thedi alainthen
Mayane unatharulal manam thelinthen
No comments:
Post a Comment