சண்முகநாதன்
பல்லவி
சண்முகநாதனை சங்கரன் மைந்தனை
கண்பாராயென வேண்டித்துதித்தேன்
அனுபல்லவி
வண்ணமயிலேறிடும் சிங்காரவேலனை
கண்கவரழகனை கேசவன் மருகனை
சரணம்
அரனயனரியும் அமரேந்திரனும்
நரர்சுரரனைவரும் கரம் பணிந்தேத்தும்
சரவணபவனை தணிகாசலனை
பரங்குன்றம் தனிலமர்ந்த கார்த்திகேயனை
No comments:
Post a Comment