கேசவன்
பல்லவி
பரிவுடன் பாலித்தருள்வாய் கேசவா
அரியுந்தன் நாமமே அனுதினம் துதித்தேன்
அனுபல்லவி
கரிக்குமபயம் அளித்தவனல்லவா
சரி நிகர் சமானம் உனக்கு யாருள்ளார்
சரணம்
விரிகமலமலர் தனில் வீற்றிருக்கும் பிரமனும்
நரியைப் பரியெனச் செய்த ஈசனும்
நரர்சுரர் இந்திரனும் கரம் பணிந்தேத்தும்
கரியவனே உனதிரு திருவடி பணிந்தேன்
No comments:
Post a Comment