ஶ்ரீலக்ஷ்மிநாராயணி(12)
பல்லவி
திருமலைக்கோடியில் கோயில் கொண்டருளும்
கருமுகிலே ஶ்ரீலக்ஷ்மிநாராயணி
அனுபல்லவி
ஒருமுறையேனும் தாசன் கேசவன்
திருமுக தரிசனம். காணவே துதித்தேன்
சரணம்
வருந்தித்துதித்திடும் பக்தருக்கெல்லாம்
அருள்தரும் தாயே ஆதி பராசக்தி
திருமகள் கலைமகள் மலைமகள் நீயே
திருவேற்காட்டிலுறை மாரியும் நீயே
No comments:
Post a Comment