கொலுசணிந்த சுந்தரி
பல்லவி
சுந்தரி உனதிரு மலரடி பணிந்தேன்
மீயச்சூர் தலம் வளர் கொலுசணிந்த திரிபுர
அனுபல்லவி
வந்தனை புரிந்திடும் பக்தருக்கு வரங்களை
தருபவளே தேவி கேசவன் சோதரி
சரணம்
இந்திராதிதேவரும் முனிவரும் வணங்கிடும்
அந்தரி நீலி அகிலாண்டேச்வரி
சந்திரகலையணிந்த உமா மகேச்வரி
வந்தெனக்கருள்புரி ----- மனோகரி
No comments:
Post a Comment