கேசவன் நீயே
பல்லவி
கேசவன் நீயே ஆதரிக்காவிடில்
நீசன் நான் வேறு எங்கு செல்வேன்
துரிதம்
சுரபதி பசுபதி ரதிபதி கணபதி
தேவசேனாபதி அனைவரும் துதித்திடும்
அனுபல்லவி
மாசிலாமணியே நீலவண்ணனே
தேசுடைத்திருமாலே கலியுகத்தெய்வமே
துரிதம்
சுகசனகாதியர் நரர் சுரர் நாரதர்
நான்முகன் திருமகள் யாவரும் வணங்கிடும்
சரணம்
நேசமுடன் உந்தன் மலர்த்தாள் பணிந்து
ஆசையுடன் தினம் பூசித்தேன்
ஈசனே அறியாமல் யான்செய்த பிழையெல்லாம்
தூசெனத்தள்ளியே எனையாட்கொள்வாய்
துரிதம்
இயலிசை நாடகம் நாட்டியம் கலைகள்
அனைத்தையும் ரசித்திடும் தேவாதிதேவனே
No comments:
Post a Comment