பீமசங்கரன் (சோதிலிங்கம்)
பல்லவி
தாளினைப் பணிந்தேன் தயைபெற வேண்டியே
நாள்தோறும் துதித்து பீமசங்கரரின்
அனுபல்லவி
மாள்வதும் பிறப்பதும் இல்லாத நிலைபெறவும்
பாழ்வினைப் பயன்களால் படுந்துயர் நீங்கவும்
சரணம்
வேள்விகளை விரும்பும் சாம்பசதாசிவன்
கோள்களும் கணங்களும் நந்தியும் வணங்கிடும்
நீள்சடையீசன் சோதிவடிவானவன்
ஆழ்கடலில் கிடந்துறங்கும் கேசவன் நேசன்
No comments:
Post a Comment