ஶ்ரீலலிதாம்பிகை
பல்லவி
பணிந்தேன் பத்மபதம் ஶ்ரீலலிதாம்பிகையே
பிணியென எனைவாட்டும் பழவினைப் பயன்தொலைய
அனுபல்லவி
அணிமணிகள் அலங்காரம் அழகுடன் புனைந்து
கனிவுடன் மாமேரு தனில் வீற்றிருப்பவளே
சரணம்
சங்கரி சங்கரன் பங்கிலுறைபவளே
மங்களம் தந்தருளும் மாகாளி பைரவி
திங்கள் பிறையணிந்த திரிபுரசுந்தரி
எங்கும் நிறைந்திருக்கும் கேசவன் சோதரி
No comments:
Post a Comment