செல்வகணபதி
பல்லவி
நல்வழிகாட்டிட வேண்டுமென விரும்பி
செல்வகணபதி உன் பாதம் பணிந்தேன்
அனுபல்லவி
தொல்பவச்சுழலில் சிக்குண்டு தவிக்கும்
ஏழையேன் கரையேர அபயமளித்து
சரணம்
பொல்லாவினையேன் உன்புகழொன்றும்
கல்லாதவனாய் காலம் கழித்தேன்
எல்லாமும் நீயென்றறிந்த பின்னாலே
கேசவன் மருகனே உனையே துதித்தேன்
No comments:
Post a Comment