பீமசங்கரன் (3)
பல்லவி
சங்கரனை உமையாள் கரம்பிடித்த ஈச்வரனை
பங்கயப்பாதனை பணிந்தேன் - பீம
அனுபல்லவி
பொங்கரவணிந்தவனை சோதிவடிவானவனை
எங்கும் நிறைந்திருக்கும் ஏழைப்பங்காளனை
சரணம்
அங்குமிங்கும் அலைபாயும் மனக்குரங்கையடக்கி
பொங்கும் மூவாசைப்பிணிதனையே களையும்
திங்கள்பிறையணிந்த கங்காதரனை
பங்கயநாபன் கேசவன் நேசனை
No comments:
Post a Comment