சரணம் மலையப்பா
பல்லவி
சரணம் மலையப்பா கேசவா
திருமலையிலெழுந்தருளி எனக்கருளுமென் ஸ்வாமி
அனுபல்லவி
கரங்களில் சங்கும் சக்கரமுமேந்திடும்
வேங்கடரமணா கோவிந்தா
சரணம்
வரம்தரும் கரமும் அபயகரமும் காட்டும்
பரமபுருஷனே. ஶ்ரீநிவாசினி
மரணம் பிறப்பெனும் மாயையையகற்றி
சரணமடைந்த எனை இனிதாட்கொள்வாய்
No comments:
Post a Comment