நன்மங்கலம் நீலவண்ணன்
பல்லவி
மனக்குறை எனக்கில்லை நீலவண்ணனே
உனது திருவடியைச் சரணடைந்த பின்னே
அனுபல்லவி
எனக்கினி பிறவி இல்லாத நிலை பெற
தினமுனைத்துதித்தேன் தீனசரண்யனே
சரணம்
துருவன் பிரகலாதன் பக்தருக்கெல்லாம்
அருள் தரவென்று அவதரித்தவனே
திருவுறை மணிமார்பா சென்னகேசவா
கருணையுடன் எனையே ஆண்டருள்வாயே
No comments:
Post a Comment