மணித்வீப கணபதி( நெய்வேலி)
பல்லவி
பணிந்தேன் மணித்வீப கணபதியின் பதமலர்
துணிந்தேன் அவனே முழுமுதற்கடவுளென
அனுபல்லவி
தணியாத பக்தியுடன் அவனருளை யாசித்து
எடுத்த கருமங்கள் தடையற நடைபெற
சரணம்
சுரபதி பசுபதி ரதிபதி ஶ்ரீபதி
தேவசேனாபதி சரச்வதியின் பதி
பூபதியனைவரும் பணிந்திடும் கணபதி
கணங்களின் அதிபதி நீ கதியெனவே
No comments:
Post a Comment