சரச்வதி அன்னையே
பல்லவி
சரச்வதி அன்னையே பணிவுடன் உந்தன்
அரவிந்த பதம்தனை சரணடைந்தேன்
அனுபல்லவி
அரனயன் கேசவன் நரர்சுரர் பணிந்திடும்
பாரதி கலைவாணி பரிந்தெனக்கருள்புரி
சரணம்
நரஜென்மமெடுத்து நாய் படும் பாடு
இரவும் பகலும் படுகின்ற ஏழையேன்
தரமான புலமையும் இசையில் ஞானமும்
பெறவே விரும்பி உளமுருகித்துதித்து
No comments:
Post a Comment