வேங்கடகிருஷ்ணன்
பல்லவி
பார்த்தசாரதியை வேங்கடகிருஷ்ணனை
காத்தருள்வாயென தஞ்சமடைந்தேன் (ஶ்ரீ)
அனுபல்லவி
வார்த்தையினாலே வர்ணிக்க இயலாத
மூர்த்தியைக் கேசவனை ருக்மிணிரமணனை
சரணம்
ஆர்த்தெழும் கடலோரம் திருவல்லிக்கேணியில்
தேர்ப்பாகனாய் நின்று பக்தருக்கருளும்
பார்த்தனுக்கு சாரதியை பஞ்சவர் நேசனை
பார்புகழ் கண்ணனை கருநீலவண்ணனை
No comments:
Post a Comment